நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் 2024/2025 ஆம் ஆண்டின் நேர்த்தி நிறை விழா சிறப்பாக நடைபெற்றது

ஈப்போ: 

பேராக் சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் 2024/2025 ஆம் ஆண்டின் நேர்த்தி நிறை விழா மிகவும் சிறப்பாக நடந்தது.

இவ்விழாவில் வகுப்பு சார் மதிப்பீட்டில் சிறப்பான அடைவுநிலையை பதிவு செய்த மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன.

கற்றல்  புறப்பாடம் மற்றும் விளையாட்டு துறையில்  சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்த 6-ஆம் ஆண்டு மாணவர்கள் நனி சிறந்த மாணவர்களாக கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஆடல் பாடல் அங்கங்களும் இன்றைய விழாவில் இடம் பெற்றன.

பள்ளியின் மேலாளர் வாரியத்தலைவரும், மகப்பேறு  மருத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்.வ.ஜெயபாலன் தம் துணவியாருடன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

பெ.ஆ.ச.தலைவர் திரு.ஜேம்ஸ் வரவேற்புரை வழங்க , பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசீலா கில்டா குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைதொடக்கி வைத்தார்.

பெற்றோர்கள் திரளாக கலந்துக் கொண்டு  இவ்வாண்டின் நேர்த்தி நிறை விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset