நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓட்டுநர் உரிம அட்டைகளை ஜேபிஜே  கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்: அந்தோணி லோக்

கோலாலம்பூர்:

ஓட்டுநர் உரிம அட்டைகளை ஜேபிஜே   கிளைகளில் நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை அறிவித்தார்.

இந்த சேவை மின்னியல் ஓட்டுநர் உரிம அட்டையைப் பெற சிரமப்படுவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும், வெளியூரில் வாகனம் ஓட்ட முற்படும் மலேசியர்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தையும் நேரடியாக ஜேபிஜே கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

1949 ஜெனிவா ஒப்பந்தத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்த இயலும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து, ஓட்டுநர் உரிம அட்டையை MyJPJ செயலியின் வழியாக புதுப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரிங்கிட் தள்ளுபடி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- கௌசல்யா ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset