நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,200க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பல்வேறு குற்றங்களுக்காக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,207 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சு மேலவையில் இதனை எழுத்துப்பூர்வ பதில் மூலம் தெரிவித்தது.

வெளிநாட்டில் உள்ள மலேசிய தூதரகப் பிரதிநிதிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில், மலேசியர் கைது செய்யப்பட்டதை அவரது உறவினருக்குத் தெரிவிப்பது,

சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்வதும், சட்ட சேவைகளைப் பெறுவதற்கான உதவியும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் விசாரணைகளில் கலந்து கொள்கிறார்கள்.

கைதிகளுக்கு உறவினர்களிடமிருந்து பணம் விநியோகிக்கிறார்கள். தடுப்பு மையங்களுக்கு அவ்வப்போது தூதரக அதிகாரிகள் வருகைகளை நடத்துகிறார்கள்.

வெளிநாட்டில் உள்ள மலேசிய தூதரக பிரதிநிதிகள் வெளிநாடுகளில் உள்ள மலேசிய குடிமக்களின் உரிமைகள், நலன்களை எப்போதும் பாதுகாக்க உதவுவார்கள் என்ற செனட்டர் சி. சிவராஜ் எழுப்பிய கேள்வி வெளியுறவு அமைச்சு இவ்வாறு பதிலளித்து.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset