நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நமக்காக போராட அமைச்சரவையில் தமிழ் அமைச்சர் இல்லை: இராஜசேகரன் ஆவேசம்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் நமக்காக போராட தமிழ் அமைச்சர் இல்லை. 

இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெருத்த வேதனையாகும் என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். இராஜசேகரன் தெரிவித்தார்.

அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக சிவக்குமார் இருந்தபோது  இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தார்.

ஆனால் இன்று வரை மூன்று தொழில் துறைகளுக்கு 300 பேர் கூட கிடைக்கவில்லை.

இப்போது எங்களுக்கு உதவி செய்ய எந்தவொரு இந்திய அமைச்சர் குறிப்பாக தமிழ் அமைச்சர் இல்லை.

தமிழ் அமைச்சர் இருந்தால் எங்களுக்கு உதவி புரிவார். ஆனால் எங்களுக்கு உதவ யாரும் இல்லை.

முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் மீண்டும் களத்தில் இறங்கி இந்திய தொழில் துறைகளுக்கு உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

இப்போதுள்ள அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் சந்திக்க முடியவில்லை. 

Protocol படி அனுமதி வாங்கி கொண்டு வாருங்கள் என்று அமைச்சின் அதிகாரிகள் உத்தரவு போடுகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் எங்களிடம் portocal  வாங்கிவிட்டா வாக்குகள் கேட்டார்கள்.

துன் சாமிவேலு, டத்தோஸ்ரீ சுப்பிரமணியம், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், சிவகுமார், குலசேகரனை நாங்கள் சந்திக்கும் போது எந்தவொரு portocal பார்த்து இல்லை.

எங்கள் பிரச்சினை குறித்து பேச வருகிறோம் என்றால் உடனே வாருங்கள் என்பார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். இந்திய தொழில் துறைகளுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset