நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் புதிய பொருளாதார கொள்கை; தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மையினர் உயர்வுக்கு வழிவகுத்தது: தென் ஆப்பிரிக்க தூதர்

கோலாலம்பூர்:

மலேசியாவின் புதிய பொருளாதார கொள்கை தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மையினர் உயர்வுக்கு வழிவகுத்தது.

மலேசியாவுக்கான தென் ஆப்பிரிக்க தூதர் டேவிட் இ மால்கம்சன் இதனை தெரிவித்தார்.

மலேசியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை திட்டம் கடந்த 1971 இல் துன் அப்துல் ரசாக் தலைமையிலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பெரும்பான்மை இனத்தவர்களான பூமிபுத்ராக்களுக்கு ஆதரவான உறுதியான செயல் திட்டங்கள் மூலம்  பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இனப் பொருளாதார சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், இரு நாடுகளும் ஒரே மாதிரியான விளைவுகளையும் அறைகூவல்களையும் எதிர்கொண்டதாக மால்கம்சன் கூறினார்.

தென் ஆப்பிரிக்காவில் கருப்பின பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக நாங்கள் படித்த ஆவணங்களில் மலேசியாவின் புதிய பொருளாதார கொள்கை முதன்மையாக விளங்குகிறது.

மேலும் இது தென் ஆப்பிரிக்காவின் சிறுபான்மையினர் வளர்ச்சியில் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தது  என்று அவர் கூறினார்.

அடிப்படையில், எங்களுக்கு ஒரே மாதிரியான விளைவுகளும்  பிரச்சனைகளும் உள்ளன.

நீங்கள் ஒரு புதிய சிறுபான்மை உயர்வுக்கு தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளீர்கள்.

இதைத்தான் நாங்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிறப்பு உரையாடலில் பேசிய டேவிட் இ மால்கம்சன் இதனை கூறினார்.

இந்த உரையாடலில் கோலாலம்பூர் பொருளாதார மன்றத்தின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால், கேஎஸ்ஐ ஆசிய பசிபிக் தலைவர் மைக்கல் இயோ ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset