நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோ வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண நேரடியாக களமிறங்குவேன்: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது நிகழும் வெள்ளப் பிரச்சினைக்கு நானே நேரடியாக களத்தில்  இறங்கி தீர்வு காண்பேன் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார். 

தீர்க்கப்படாமல் இருக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு என் தொகுதி மக்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகின்றனர். 
இந்த விவகாரத்தில் இனியும் பொறுமை காக்க முடியாது. 

இங்குள்ள மெர்பாவ் செம்பாக் தேசியப் பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு இரண்டாவது முறையாக வருகை தந்த டத்தோ ரமணன் இவ்வாறு கூறினார்.

வெள்ளம் என்பது உங்களுக்கு வேண்டுமானால் ஒரு சம்பவமாக இருக்கலாம். 

ஆனால், நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தான் அதன் வலி தெரியும் என்று என் தொகுதி மக்கள் தங்களின் மனக் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.  

இதனைக் கேட்கும்போது என் மனம் வலிக்கிறது. இதன் வலி சாதாரணமான ஒன்றல்ல. 

தூராம் நின்று பார்க்காமல், வெள்ளம் ஏற்பட்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறேன். 

எங்களை இந்தப் பிரச்சினையிலிருந்து தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று கேட்கிறார்கள். 

என் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கேற்ப சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இனி எனக்குத் தேவை தீர்வு மட்டுமே என டத்தோ ரமணன் கூறினார். 

இதனிடையே, இங்குள்ள நிவாரண மையத்தில் இரவு வரை 21 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். 

அவர்களுக்கான உதவிகள் முறையே வழங்கப்பட்டன என்று ஷா ஆலம் சமூக நல இலாகாவின் அதிகாரி முகமட் நஸ்ரி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset