நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று நபர்களின் கைத்தொலைபேசிகளை எம்சிஎம்சி கைப்பற்றியது

புத்ராஜெயா:

சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை  பரப்பப்பட்டது தொடர்பான விசாரணையில், மூன்று சமூக ஊடக கணக்கு பயனர்களின் கைத்தொலைபேசிகளை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி கைப்பற்றியது.

செகுபார்ட் என்று அழைக்கப்படும் மூன்று சமூக ஊடக கணக்கு உரிமையாளர்களான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், பதிவு செய்யும் சலீம் இஸ்கந்தர் ஆகியோரின் உரையாடலை பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ் அல்லது பாபகோமோ என்று அழைக்கப்படும் உரையாடலின் பதிவு செய்யப்பட்டது. 

பத்ருல் ஹிஷாம், சலீம் ஆகியோரிடம் சைபர்ஜெயாவில் உள்ள எம்சிஎம்சி தலைமையகத்தில் அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் முஹம்மது அஸ்ரியின் உரையாடல் ஸ்தப்பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இவர்களிடம் இருந்து கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது என் எம்சிஎம்சி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset