நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதப் பிரச்சினை தூண்டும் தரப்பினர் மீது  உடனடி நடவடிக்கை: தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு

புத்ராஜெயா:

நாட்டில் மதப் பிரச்சினை தூண்டும் தரப்பினர் மீது  உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இதனை தெரிவித்தது.

மலேசிய இந்து சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டகாங்குடன் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

அண்மையக் காலமாக சமூக வலைத் தளங்களில் பரவி வரும் பல வெறுப்பூட்டும் அறிக்கைகள் தொடர்பாக இந்த சந்திப்பின் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக பொது நல்லிணக்கத்தையும் ஒழுங்கையும் பாதிக்கும் வகையில் உள்ள கருத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பு சமூகத்தினரிடையே புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் மதத்தை தூண்டும் பிரச்சினைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு தனிநபரும் தங்கள் மதத்தையும், அமைதியான நம்பிக்கையையும் கடைப்பிடிக்க முடியும்.

மேலும் மற்ற மத நம்பிக்கையாளர்களிடையே புரிந்துணர்வையும் மரியாதையையும் வழங்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில் மதப் பிரச்சினை தூண்டும் தரப்பினர் மீது  உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் நாட்டில் மத தொடர்பில் சர்ச்சைகள் நிகழாமல் இருப்பதை தவிர்க்க முடியும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஓர் அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset