நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன்: ஹஃபிசுல் 

கோத்தா பாரு: 

காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் வரவேற்பு முகப்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஹஃபிசுல் கூறினார்.

மேலும், இந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்த தனக்கு ஏழு வழக்கறிஞர்கள் தேவை என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிறை சட்டை அணிந்திருந்த ஹபிசுல் ஹவாரி (38) என்ற சந்தேக நபர், போலீசார் உட்பட நான்கு அதிகாரிகளுடன் காலை 8.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தார்.

1971-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின்படி இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நேற்று மதியம் 3 மணியளவில் ஜாலான் பாயாமிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் முன் சிறப்பு குற்றப் புலனாய்வுத் துறை (டி 9), கிளந்தான் தொடர்ச்சியான குற்றப் புலனாய்வுத் துறையினர் ஹஃபிசுலைக் கைது செய்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset