நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெக்டோனல்ஸ் நிறுவனத்தை எல்லை மீறி புறக்கணிக்க வேண்டாம்: முஃப்தி 

பெட்டாலிங் ஜெயா: 

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள், குறிப்பாக மெக்டோனல்ஸ் நிறுவனத்தைப் புறக்கணிக்காமல் சட்டத்தின்படி செயல்படுமாறு கூட்டரசு பிரதேச முஃப்தி லுக்மான் அப்துல்லா வலியுறுத்தினார்.

ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது பொருளைப் புறக்கணிப்பது நுகர்வோரின் உரிமை.

அதனால் இவ்விவகாரத்தில் அனைவரும் மெக்டோனல்ஸ் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் லுக்மான் கூறினார்.

மக்கள் நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்குமாறு தாம் மக்களுக்கு அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

நுகர்வோர் தங்கள் உண்மைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் மெக்டோனல்ஸ் போன்ற நிறுவனங்களைப் புறக்கணிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மெக்டோனால்ஸ், கேஎஃப்சி போன்ற துரித உணவுச் சங்கிலிகளின் வாடிக்கையாளர்களை "நாய்கள்" என்று முத்திரை குத்தியுள்ளதாகக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. 

வார இறுதியில், குவாந்தன், பகாங்கில் உள்ள மெக்டோனல்ஸ் கடைக்குத் தனது குடும்பத்தினருடன் சென்றபோது, ஒரு தரப்பு தன்னை அவமதித்ததாக ஒருவர் கூறினார். 

அவர்களில் ஒருவர் கடையை விட்டு வெளியேறும்போது தலைகவசத்தில் அடிப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றவியல் சட்டத்தின் 506 வது பிரிவின் கீழ் குற்றமிழைத்ததற்காக அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

இது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக இருக்கும்.

இத்தகைய தீவிர நடத்தை இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்பதை லுக்மான் முஸ்லிம்களுக்கு நினைவூட்டினார்.

சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுங்கள். ஒழுக்கத்தின் எல்லைக்கு அப்பால் செல்லாதீர்கள் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset