நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த பாகிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறை: ஷாஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்: 

11 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகத் தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த புத்ராஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஷா ஆலம் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 39 வயதான யூசப் குல் என்பவருக்கு எதிராக ஐந்து பிரம்படிகள், சிறைத்தண்டனையில் இருக்கும்போது அவருக்கு கவ்ன்ஸ்லிங் வழங்குவது மற்றும் தண்டனை காலம் முடிந்து மூன்று ஆண்டுகள் அவர் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் ஆகியவை அடங்கிய உத்தரவும் அவருக்கு எதிராகப் பிரப்பிக்கப்பட்டது. 

செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதித்துறை ஆணையர் ரோசியாநயாத்தி அஹம்மத் தெரிவித்தார். 

உயர்நீதிமன்றம் யூசப்விற்கு எதிரான தண்டனையைப் பரிசீலிப்பதில் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கான காரணங்களை ஆய்வு செய்த நிலையில் அது தண்டனை சட்டத்தின் கோட்பாடுகளின் வரம்பிற்குள் இருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டறிந்தது.

செஷன்ஸ் நீதிமன்றம் சரியான தண்டனையை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

குற்றச்சாட்டுகளின்படி, 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹுலு லங்காட்டிலுள்ள குடியிருப்பில் தன் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset