நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி இந்தியர், சீனர்களின் வாக்குகளுக்குக் குறி வைக்கின்றது: அரசியல் ஆய்வாளர் கருத்து

பெட்டாலிங் ஜெயா: 

கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசியக் கூட்டணி மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இந்தியர்கள் மற்றும் சீனர்களின் வாக்குகளுக்குக் குறி வைப்பதாக அகாடமி நுசந்தாராவைச் சேர்ந்த அரசிய ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார். 

தேசியக் கூட்டணி மலாய்க்காரர்களின் வாக்குகளுக்காக போராடாது. ஏனெனில் அஃது ஏற்கனவே அவர்களுக்குச் சொந்தமானது என்றார் அவர். 

இந்த இடைத்தேர்தலில் மலாய் வாக்காளர்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு உறுதியான ஆதரவைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வெற்றி பெறுவதற்கு தேசியக் கூட்டணிக்கு இந்தியர்கள் மற்றும் சீனர்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. 

70% முதல் 80% வரையிலான மலாய் வாக்காளர்கள் நிச்சயம் தேசியக் கூட்டணியை ஆதரிப்பார்கள். 

அதனால் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களைக் கவர்வதுதான் தேசியக் கூட்டணியின் முதன்மை நோக்கமாகும். 

கடந்த மாநிலப் பொது தேர்தலில் அதே பெரும்பான்மையுடன் சிலாங்கூர் தொகுதியை மீண்டும் டிஏபி தற்காத்துக் கொண்டதையும் அஸ்மி மறுக்கவில்லை. 

அச்சமயம் பச்சை அலைக்கான ஆதரவு உச்சத்தில் இருந்தபோதும் பக்காத்தான் ஹராப்பான் 4,000 வாக்குகளுக்கு மேல் பெரும்பான்மையுடன் அத்தொகுதியை மீண்டும் தன் வசமாக்கியது. 

எனவே, இந்தத் தொகுதி டிஏபியின் கோட்டையாக இருப்பதை அவர் மறுக்கவில்லை.

இந்த இடைத்தேர்தல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவை ஈர்க்கும் அம்னோவின் திறனுக்கான மற்றொரு சோதனையாக இருக்கும் என்று அஸ்மி கூறினார்.

இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், டிஏபி குறைந்தபட்சம் 60% இந்திய வாக்குகளைப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

கோல குபு பாருவில் 50% மலாய் வாக்காளர்கள், 30% சீனர்கள் மற்றும் 18% இந்திய வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர்கள் உள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset