நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாந்தானில் 100 மீட்டருக்குள் இருக்கும் கேகே மார்ட், மெக்டோனால்டு மீது தாக்குதல்

குவாந்தான்:

குவாந்தானில் சுமார் 10 கேகே மார்ட்டும் 5 மெக்டோனால்ட் துரித உணவகங்களும் உள்ளன.

இந்த இரண்டு வணிகக் கிளைகளின் மீது இரண்டு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இவ்விரண்டு சம்பவங்களும் 100 மீட்டருக்குள் நடந்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்கள் போலீசாரை தொடர்பு கொண்ட போது, ​​இந்த சம்பவம் தொடர்பான அதிகாரிகள் விசாரணை எதுவும் இதுவரை நடத்தவில்லை என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி குவாந்தான் சுங்கை இசப்பில் உள்ள கேகே மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இது அல்லாஹ் என்று எழுதப்பட்ட காலுறைகளைச் சர்ச்சை தொடர்பாக நடந்த தாக்குதலாகும்.

கேகேமார்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

இதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை  சிறிய குழுவைக் கொண்ட எதிர்ப்பாளர்கள் மெக்டொனால்டுக்கு எதிராக புறக்கணிப்பு பேரணி நடத்தினர்.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் துரித உணவு உரிமையைப் புறக்கணித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மெக்டொனால்டில் மீண்டும் சாப்பிடுகிறார்கள் என்பதில் குவாந்தான் சமூக ஊடகக் குழுக்களின் உரையாடல்கள் அதிருப்தியைக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset