நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஈரானின் நடவடிக்கைகள் நியாயமானது: அன்வார்

புத்ராஜெயா:

டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானங்களை ஏவியது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்று பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இஸ்ரேல் மீது அடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஈரான் அரசாங்கம்  வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதியில் மலேசியா திருப்தி அடைகிறது என்று பிரதமர்   கூறினார்.

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலையை மோசமாக்கும் எந்த எதிர் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று மலேசியா இஸ்ரேலிய ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறது. 

நிலைமை மோசமடைவதை சர்வதேச மக்கள் விரும்பவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இதுவாகும்.

மேலும் இதுவரை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நாட்டில் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset