நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியுரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்தும் பேத்திக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தைக் கட்ட வேண்டியுள்ளது: தாத்தா வருத்தம்

அலோர் ஸ்டார்:

கடந்த ஜனவரி மாதம் 15 வயது சிறுமியின் குடியுரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

இருந்தும் தனது பேத்தியின் பள்ளிக்கு வெளிநாட்டு மாணவர் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது என்று 73 வயதான தாத்தா பி. சதாநாதன் கூறினார்.

என் பேத்தி மதுமித்தா தேவகரன் அலோர் ஸ்டாரில் உள்ள் இடைநிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.

அவரின் தந்தையான என் மகன் இந்தோனேசிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

இருந்தாலும் மதுமித்தாவுக்கும் அவரின் தம்பிக்கும் குடியுரிமை இல்லை. இந்தோனேசிய கடப்பிதழ் மட்டுமே உள்ளது.

இவர்கள் இருவரும் கல்வி பயில்வதற்கு அந்நிய நாட்டு மாணவர்களுக்கான 240 வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மதுமித்தாவின்  குடியுரிமை விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது.

பிறகு நாங்கள் அலோர் ஸ்டார்  பதிவு இலாகாவிற்கு பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கச் சென்றோம். பணம் செலுத்தப்பட்டது.

நாங்கள் காத்திருக்க வேண்டும் என்று அங்குள்ள ஜேபிஎன் அதிகாரி கூறினார். 

ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும் என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், தனது பேரன் பள்ளிக்குச் செல்ல விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை இன்னும் செலுத்த வேண்டும் என்று பள்ளி தங்களுக்குத் தெரிவிக்கின்றனர்.

அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு உணவகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் அவரது சம்பளம் கட்டணத்தை ஈடுகட்ட முடியாது.

எனது தினசரி சம்பளம் 40 ரிங்கிட் மட்டுமே. எனது இரண்டு பேரக்குழந்தைகளையும் குறைந்த சம்பளத்தில்தான் நான் வளர்க்க வேண்டும். 

இன்னும் குடியுரிமை பெறாத மதுமிதாவின் தம்பிக்கு இன்னும் வெளிநாட்டு மாணவர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆகவே கல்வி அமைச்சு எங்களுக்கு உதவ வேண்டும் என்று (கேபிஎம்) எங்களுக்கு உதவும் என்று  சதாநாதன் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset