நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேச நிந்தனை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது: சைஃபுடின் 

கோலாலம்பூர்:

தேச நிந்தனை சட்டத்தில் திருத்தம் செய்யும் பணியைத் தொடங்க உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு அமைச்சரவை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

3 ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான பிரச்சனையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

மாமன்னரைப் பாதுகாக்கும் வகையில் தேச நிந்தனைஉ சட்டத்தில் திருத்தம் செய்ய கொள்கையளவில் ஒப்புக் கொண்டதாக கடந்த ஜூலை மாதம் அரசு அறிவித்தது.

மலாய் ஆட்சியாளர்களுடான தனது சந்திப்பின் போது, ​​அரச நிறுவனங்களைத் தாக்கியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பட்டதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார். 

அரசியலமைப்பில் மாமன்னரின் பங்கு இடம் பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றார்.

அதன்படி, தேச நிந்தனை சட்டம் மதம், மன்னருக்கு எதிரான தூண்டுதல்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, அரசியலுக்காக அல்ல என்பது அரசின் நிலைப்பாடாகும் என்று சைஃபுடின் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset