நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாது: கல்வி அமைச்சு 

கோலாலம்பூர்:

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான பிரச்சனையில் கல்வியமைச்சு தீவிரம் காட்டி வருகின்றது. 

இந்தப் பிரச்சனை தனது அமைச்சின் கவனத்தில் இருப்பதாகவும், ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கல்வியமைச்சு தயாராகவுள்ளது. 

பள்ளிக்கூடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சனைகளைக் கல்வியமைச்சு பொறுத்துக் கொள்ளாது என்று கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. 

17 வயது மாணவன் தனது பள்ளி ஆசிரியைக் காதலிப்பதாகக் கூறப்படும் குடும்பத்தின் புகாரை விசாரித்து வருவதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மாணவரிடமும் ஆசிரியரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் புலனாய்வுப் பிரிவின் (டி11) முதன்மை உதவி இயக்குநர், மூத்த உதவி ஆணையர் சித்தி கம்சியா ஹசான் கூறினார். 

இச்சம்பவம் குறித்து 46 வயதுடைய மாணவரின் தாயாரிடமிருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அன்று தனது தரப்புக்குப் புகார் கிடைத்ததாக சிப்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார். 

தனது 16 வயது மகனின் கழுத்தில் சிவப்பு அடையாளத்தைக் கண்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கணித ஆசிரியருடன் பாடங்களை மீள்பார்வை பின் திரும்பிய பிறகு இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 12-ம் தேதி மாலை 4.50 மணியளவில் வீட்டிற்குச் செல்ல வேண்டிய பாதிக்கப்பட்டவர் நூலகத்தில் தனது கணித ஆசிரியருடன் இருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset