நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலுவையில் உள்ள 14,000 குடியுரிமை விண்ணப்பங்களை ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும்: சைபுடின்

கோலாலம்பூர்:

மலேசிக் குடியுரிமைக்கான நிலுவையில் உள்ள 14,000 விண்ணப்பங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும்.

இதனை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் உறுதியளித்தார்.

குழந்தைகளை குடிமக்களாகப் பதிவு செய்ய அரசாங்கத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 15 ஏ பிரிவு தொடர்பான விண்ணப்பங்கள் இந்தக் காலத்திற்குள் முடிவுகள் வழங்கப்படும்.

இந்த பிரச்சினைகளுக்கு  2024 டிசம்பர் 31 இதைத் தீர்வு காண வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

வரவிருக்கும் ரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பிறகு ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்க விரும்புகிறேன்.

இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

கைரி, ஷாரில் தொகுத்து வழங்கும் கெலுவார் செகஜாப் நிகழ்வில் கலந்துக் கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset