நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கு விசாரணைகளில் மேலும் அவகாசம் கேட்பதை நிறுத்துங்கள்: சட்டத்துறை தலைவர்

கோலாலம்பூர்:

வழக்கு விசாரணைகளை தேவையில்லாமல் தாமதப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.

தேசிய சட்டத்துறை தலைவர் ரபீக் ரஷீத் அலி இதனை தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், குறிப்பாக உயர்மட்ட வழக்குகள் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்யும் பிரதிநிதித்துவங்கள் மீது சரியான நேரத்தில் வழக்கறிஞர்கள் முடிவெடுக்க வேண்டும்.

இதன் வாயிலாக பொது நலன், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கருதப்பட வேண்டும்.

எனவே, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் விரைந்து செயல்பட வேண்டும்.

முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், அவர் அரசியல் காரணங்களால் பாதிக்கப்படுகிறார் என்று தோன்றும்.

கடந்த வாரம் 15ஆவது நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் தொடக்கத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் ரபீக் இதனை குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset