நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் எதிரிகளுக்கு மோசமான வார்த்தைகளைச் சொல்லி முத்திரை குத்துவது அன்வாருக்கும் மொஹைதீனுக்கும் அழகல்ல: கைரி சாடல்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினும் அரசியலில் தங்களின் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும்.

அதை விடுத்து தங்கள் அரசியல் எதிரிகளை அருவறுப்பான வார்த்தைகளைக் கொண்டு முத்திரை குத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இப்போது மடனோன், வலவுன் போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற வார்த்தைகள் இழிவானவை. அவமதிப்புக்குரியவை என்பது அவர்களுக்கு ஏன் தெரியவில்லை?

மொஹைதின் நிர்வாகத்தின் போது, ​​கவாரிஜ் போன்ற மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது.

கவாரிஜ் என்பது தீவிர நம்பிக்கைகள் கொண்ட அல்லது மற்ற முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்களை குறிக்கும் கீழ்த்தரமான சொல்.

அன்வாருக்கும் மொஹைதினுக்கும் இப்போது 70 வயதாகிறது.

இன்னுமும் இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தி முத்திரை குத்துவதை நிறுத்திவிட்டு முதிர்ச்சியுடன் அவர்கள் அரசியலில் நடந்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset