நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் வீட்டுச் சிறைக்கு தகுதியற்றவர்: சைபுடின்

கோலாலம்பூர்:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், வீட்டுக் காவலில் இருந்தபடியே சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தகுதியற்றவர்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் இதனை தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணி, ஊனமுற்ற கைதிகள், நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும்  கைதிகள் மட்டுமே வீட்டுக் காவலுக்கு தகுதியுடையவர்கள்.

அந்தப் பட்டியலில் நஜீப் இடம் பெற முடியாது. அவர் அந்த வரையறைக்குள் வர முடியாது.

கடந்த சனிக்கிழமையன்று அரசாங்கம் நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சிறைத்தண்டனையுடன் கைதிகளுக்கு வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்த கொள்கையளவில் ஒப்புக்கொண்டது.

சட்டத்தில் உள்ள பொருத்தமான விதிகளின் அடிப்படையில் இந்த முயற்சியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக சைபுடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset