நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்நாட்டு விமான சேவைக்கு 6 விழுக்காடு எஸ்.எஸ்.டி வரி; போக்குவரத்து, நிதியமைச்சுகள் கலந்தாலோசிக்கும் 

கோலாலம்பூர்: 

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு 6 விழுக்காடு எஸ்.எஸ்.டி 6 விழுக்காடு நிலைநிறுத்த போக்குவரத்து, நிதியமைச்சுகளிடம் கலந்தோலோசிக்கப்படும் என்று நாட்டின் போக்குவரத்துறை அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். 

உள்நாட்டு விமான சேவைகளில் எஸ்.எஸ்.டி வரி 6 விழுக்காடாக அதிகரிக்கும் என்று அமைச்சரவையில் இதற்கு முன்னதாக கலந்தாலோசிக்கப்பட்டதாக அந்தோணி லோக் விவரித்தார். 

நிதியமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த விமான சேவையில் எஸ்.எஸ்.டி வரி குறித்து தெரியப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். 

முன்னதாக, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.டி வரி 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்வு கண்டது. இந்த வரி உயர்வு என்பது உணவு, பானங்களை உட்படுத்தப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset