நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடி அவாங்கின் வாக்குமூலம் நாளை பதிவு செய்யப்படும்: ஐஜிபி

கிள்ளான்:

இஸ்லாத்தை நிலைநிறுத்துவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஸ் கட்சியின் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் வாக்குமூலத்தை போலீசார் நாளை பதிவு செய்ய உள்ளனர்.

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் ராஜா லாட்டில் உள்ள பாஸ் தலைமையகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு காவல்துறையிடம் அவர் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அவர் உடல்நிலை சரியில்லாததால் இதற்கு முன்பு போலீஸ் அவரது அறிக்கையை பதிவு செய்யவில்லை.

ஆனால் இப்போது அவரது அதிகாரி தேதியை உறுதி செய்துள்ளார்.

எனவே நாங்கள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்கிறோம்.

கிள்ளானில் இன்று பண்டார் சுல்தான் சுலைமான் போலீஸ் குடியிருப்பு சாவி வழங்கும் விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset