நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய ஆதாரங்கள் கிடைத்தால் எம்எச் 370 விசாரணைகள் மீண்டும் திறக்கப்படும்: பிரதமர்

சிட்னி:

கடந்த 2014ல் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது தொடர்பான புதிய ஆதாரங்கள் இருந்தால் மீண்டும் விசாரணையைத் தொடங்க மலேசியா தயாராக உள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

2014 மார்ச் 8ஆம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற விமானம் காணாமல் போனது.

இவ்விமானத்தை தேடும் பணிகளில் மலேசியா, ஆஸ்திரேலியா, சீனாவுடன் சேர்ந்து மேற்கொண்டன.

கிட்டத்தட்ட 130 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட வேளையில் இந்த தேடும் பணி 2017ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.

இருந்தாலும் இதுவொரு ஒரு முக்கிய வழக்கு.

அது மீண்டும் திறக்கப்பட வேண்டும்  என்பதற்கான சான்றுகள் இருந்தால், நாங்கள் நிச்சயமாக மீண்டும் திறப்பதில் என்ற நிலைப்பாட்டில் மலேசியா உறுதியாக உள்ளது.

மெல்போர்னில் ஆசியான்-ஆஸ்திரேலியா உச்சநிலை மாநாட்டிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset