நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய குடியுரிமை விண்ணப்பம்; செயல்முறைகள் மேம்படுத்தப்படும்: சைபுடின்

ஈப்போ:

மத்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கான செயல்முறைகள் மேம்படுத்தும்.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை தெரிவித்தார்.

மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் தேசிய மொழியில் புலமை அவசியமாக உள்ளது. 

அதன் அடிப்படையில் அதற்கான விண்ணப்பங்கள் மலாய் மொழியில் இருக்க வேண்டும்.

இதன் வாயிலாக மலாய் மொழி ஆற்றல்,  எழுத்துத் தேர்வுகள், நேருக்கு நேர் நேர்காணல்கள் உட்பட பல  செயல்முறைகள் வாயிலாக சோதிக்கப்படும்.

ஈப்போ பண்டார் மேரு ராயாவில் உள்ள உள்துறை அமைச்சின் அலுவலகத்தில் நடந்த குடியுரிமைக்கான மலாய் தேர்வை நான் நேரடியாக பார்த்தேன்.

அங்கு வந்த வேட்பாளர்கள் அனைவரும் சுதந்திர தினத்திற்கு முன்பே பிறந்தவர்கள் என்பதை நான் கவனித்தேன்.

ஆனால் அவர்கள் நீல அடையாள அட்டைகளைப் பெற தேவையான ஆவணங்கள் இல்லை.

ஆகையால மலாய் மொழி அடிப்படையுல் பல பிரிவுகள் போதுமானவௌ என நான் நினைக்கிறேன்.

ஏனெனில் சுய அடையாளம், குடும்ப பின்னணி, மலேசியர்களின் சுவையான உணவுகள் அல்லது முக்கிய இன விடுமுறைகள் போன்ற அடிப்படை அறிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு படங்களும் வழங்கப்பட்டன. இது 80 அல்லது 90 வயதிற்குட்பட்டவர்களுக்கு உதவும்.

ஆனால் எனது பார்வையில்  அதை எளிதாக்க விரும்புவதால், பல முன்னேற்றங்கள் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset