நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதைப் படம்பிடிக்காதீர்கள்: சூல்கிஃப்லி

புத்ராஜெயா:

ஹஜ், உம்ரா பயணிகள் ஹஜருல் அஸ்வத்  முத்தமிடும் காணொலிகளையும் படங்களையும் பதிவு செய்ய வேண்டாம்.

பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்கள் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்  சூல்கிஃப்லி முஹம்மத் இதனை அறிவுறுத்தினார்.

புனிதமான, உன்னதமான வழிபாடுகள் பொருத்தமற்றதாகக் கருதப்படும் விதத்தில் சேதப்படுத்தப்படுவது மிகவும் மோசமானது.

சிலரது சமீபத்திய நடவடிக்கைகளை  நான் பார்த்து வருகிறேன்.

பலர் சமூக ஊடகங்களில் கஅபா அல்லது ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொடும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

இதுவொரு ட்ரெண்ட் என்றாலும், அந்தப் போக்கை விட்டுவிடுங்கள். நீங்கள் இறை வழிப்பாட்டிற்குத்தான் அந்தப் புனித ஆலயத்திற்கு சென்றுள்ளீர்கள்.

பைத்துல்லாஹ்வுக்கு முன்னால் நின்று நமது பாவங்களுக்காக, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதும் பிரார்த்தனை புரிவதும் ஆகியவற்றை நாம் சிந்திப்பது பொருத்தமானது. ஆனால் அதனை நாம் மறந்து விடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எந்த உள்ளடக்கத்தையும் உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதரவற்றை சிந்திக்க நேரமில்லாமல் நாம்  இருக்கிறோம்.

முன்னதாக, ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதற்காக தமது யாத்ரீகர்களின் குழுவைக் கூட்டி ஈர்க்க வேண்டிய ஒரு சமூக ஊடகப் பயனரின் வீடியோ நாடெங்கும் வைரலானது.

அந்தக் கல்லை முத்தமிடுவது கட்டாயக் கடமை அல்ல என்று முதலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் பேசிய சூல்கிஃப்லி மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset