நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோசடியில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்ப்பட்ட தொலைப்பேசி எண்கள் முடக்கம்: குலா

கோலாலம்பூர்:

நாட்டில் மோசடியில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்ப்பட்ட தொலைப்பேசி எண்கள் முடக்கக்கப்பட்டுள்ளன.

பிரதமர் துறையின் சட்டம், சீர்த்திருத்த துறை துணையமைச்சர் எம். குலசேகரன் மக்களவையில் கூறினார்.

மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம் தேசிய மோசடி புகார் மையம் கடந்த ஜனவரி மாதம் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 224 தொலைபேசி எண்களை முடக்கியது.

தேசிய மோசடி புகார் மையத்திடம் பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில், 131 எண்களை கண்டறிந்து.

பின்னர் அவற்றைத் தடுத்ததாகவும், மேலும் 93 எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

எந்தவொரு பரிவர்த்தனையும் தொடரும் முன் இந்த எண்கள் போலீஸ்படையின் 'Semak Mule' அமைப்பில் பொதுக் குறிப்புகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 2022 மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இடையே மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் எடுத்த 155 நடவடிக்கைகளை விட அந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இதே காலகட்டத்தில், மோசடி நடந்ததற்கான ஆதாரம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 1,577  புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குலசேகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset