நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈசிஆர்எல் திட்டத்தை ரந்தாவ் பன்ஜாங் வரை நீட்டிக்க வேண்டும்: கிளந்நான் சுல்தான் எதிர்பார்ப்பு

கோத்தாபாரு:

ஈசிஆர்எல் ரயில் திட்டத்தை ரந்தாவ் பன்ஜாங் வரை நீட்டிக்க வேண்டும் என கிளந்தான் மாநில சுல்தான் முஹம்மது V தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் வாயிலாக எல்லைகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.

மேலும், இது மலேசியா தாய்லாந்து இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும் என்றார் அவர்.

கிளந்தான் மாநில சட்டமன்றத்தின்  இரண்டாவது கூட்டத் தொடரின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

மாநில சுல்தானின் உரையை மந்திரி புசார்  மாநில மந்திரி புசார் டத்தோ முகமத் நசாருடின் டாவுட் வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும்  அவர் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். 

மேலும் இப்பிரச்சினைக்கு  விரிவான தீர்வு விரைவில செய்யப்பட வேண்டும்.

கிளந்தான் ஆறு, கோலோக் ஆற்றின் முதல் கட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நதிப் படுகை திட்டத்தின் செயல்பாட்டின் முன்னேற்றம் 92 சதவீத அளவில் உள்ளது.

இதற்கான அனுமதியஇ வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.

மேலும் கிளந்தனில் உள்ள முக்கிய சாலை ட்டங்களான சென்ட்ரல் ஸ்பைன் சாலை, கோத்தா பாரு-கோலகிராய் எக்ஸ்பிரஸ்வே போன்றவற்றை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

அவை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்நாட்டில் ஹலால் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒருவராக மாறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில அரசாங்கத்திற்கு சுல்தான் உத்தரவிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset