நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகர் பசார் புடுவில் அதிரடி சோதனை: 263 பேர் கைது

கோலாலம்பூர்:

தலைநகர் பசார் புடுவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 263 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூடின் அப்துல் மஜிட் கூறினார்.

நாட்டில் சட்டவிரோத அந்நிய நாட்டினரை முறியடிக்கும் நோக்கில் அமலாக்க அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் பசார் புடுவில் மாலை 6 மணி முதல் சோதனைகளை நடத்தினர்.

குறிப்பாக அங்குள்ள ஹோட்டல்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

அப்போது ஒருவர் முதல் மாடியில் இருந்து குதித்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் கீழ் உள்ள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சோதனையில் 263 பேர் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டன்னர்.

வங்காளதேசம், நேப்பாளம், பாகிஸ்தான், மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, வியட்நாம், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் தொழில் உட்பட பல குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset