நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் பொறியியல் பட்டதாரிகளுக்கிடையே இன்னும் வேலையின்மை சிக்கல்

பெட்டாலிங் ஜெயா: 

உள்ளூர் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு உயர் தொழில்நுட்பத் துறையில் பணிப்புரிய அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவு உள்ளூர் பொறியியல் பட்டதாரிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

உயர்த் தொழில்நுட்பக் கல்வித் துறையில் பின்னணியைக் கொண்ட பல பட்டதாரிகள் இன்னும் தங்கள் துறைக்கு இணையான வேலை கிடைக்காமல் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். 

வெளிநாட்டு பட்டதாரிகளை தற்காலிகமாக வேலை செய்ய அனுமதிக்கும் திட்டம் உள்ளூர் பட்டதாரிகளுக்கு அநீதியானது என்றார்.

முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டதாரிகள் பலர் இருக்கும் நிலையில் வெளிநாட்டுப் பட்டதாரிகள் தேவை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மலேசியாவின் திறமையான மனிதவளம் இல்லாததற்கு பொறியியலாளர்களின் ஆரம்ப சம்பளம் குறைவாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணமாகும். 

முன்னதாக, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெருல் ஜப்ருல் அப்துல் அஜீஸ், உள்ளூர் உயர்கல்வி கூடங்களில் வெளிநாட்டு பட்டதாரிகளை நாட்டில் தற்காலிகமாக வேலை செய்ய அனுமதிக்க முன்மொழிந்தார்.

உள்ளூர் உயர் கல்வி கூடங்களில் வெளிநாட்டு பட்டதாரிகளை நாட்டில் தற்காலிகமாக பணிபுரிய அனுமதிக்கும் நடவடிக்கை, இந்த நேரத்தில் தேவைப்படும் திறன்மிக்க மனிதவளத்தை உள்ளூர் தொழில்துறைக்கு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset