நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

பெட்டாலிங் ஜெயா: 

சீனப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. 

இலவச டோல் சேவை இன்றும் தொடர்வதால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சுங்கை பூலோவிலிருந்து தெற்கு ரவாங் வரையிலும், தெற்கு ரவாங் முதல் ரவாங் வரையிலும் வடக்கு நோக்கிய சாலையில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதாகவும், சிலிம் ரிவரிலிருந்து சுங்காய் வரை நெரிசல் இருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனம், பிளஸ் தெரிவித்துள்ளது. 

கிலோமீட்டர் 25 இல் ஒரு விபத்தைத் தொடர்ந்து புத்ராஜெயாவிலிருந்து பண்டா கமுடா கோவ் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிளாங் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு போக்குவரத்து நெரிசல் இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. 

கென்திங் செம்ப்பாலிருந்து புக்கிட் திங்கிக்குச் செல்லும் கிலோமீட்டர்  42.5-இல் விபத்து ஏற்பட்டுள்ளதால் இடப்புறப் பாதை தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இன்று மதியம் மற்றூம் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset