நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் இறங்கினால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் எனும் வாசகம் யாருக்கு நினைவுள்ளது?: நஜீப்

கோலாலம்பூர்:

நஜீப் இறங்கினால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும்  என்ற வாசகம் யாருக்கு நினைவுள்ளது

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகநூலில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது ரிங்கிட்டின் செயல்திறன் குறித்த விளக்கப்படத்தை நஜீப் இறங்கினால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்ற தலைப்பில் அவர் பதிவேற்றியுள்ளார்.

மேலும் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்திப்பது குறித்து நஜீப் கவலை தெரிவித்துள்ளார்.

14ஆவது பொதுத் தேர்தலில் எனது வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிடின் மதிப்பு 24.1 சதவீதம் அல்லது 90 சென் குறைந்துள்ளது என்பதே உண்மை.

அந்த தேர்தலுக்கு முன் ரிங்கிட்டின் மதிப்பு வலுவாக இருந்தது. ஆனால், எனது பதவி விலகல் அந்தப் போக்கை மாற்றியது.

கடந்த ஆறு ஆண்டுகளில் ரிங்கிட்டின் மதிப்பு கடந்த 14ஆவது பொது தேர்தலுக்கு முந்தைய நிலைகளுக்கு மீளவில்லை.

நேற்று, ரிங்கிட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது என்று நஜீப் முகநூலில் எழுதியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset