நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வளமான, உயர்தர இலக்கை அடைய அரசு கடுமையாக உழைக்கும்: சீன புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்

புத்ராஜெயா:

வளமான உயர்தர மலேசியாவிற்கான லட்சியங்களை அடைய  அரசாங்கம் கடுமையாக உழைக்கும்.

சீன நாட்காட்டியின்படி, டிராகன் ஆண்டு என்பது படைப்பாற்றல், நம்பிக்கையுடன் வலிமை குறிக்கிறது.

எனவே, உலகளாவிய கொள்கைகளின் உணர்வை எழுப்புவதற்கு, மலேசியர்களாகிய நாம் ஓர் உயர்ந்த நாகரீகமான சமூகமாக மாறுவதற்கான உறுதியைத் தொடர வேண்டும்.

சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கண்டவாறு கூறினார்.

பொருளாதாரம் சமமாகவும், நிலையானதாகவும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்

ஊழலால் ஏற்படும் இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக நாட்டில் ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ஒட்டுமொத்த சீன சமூகத்திற்கும் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் அபரிமிதமான மகிழ்ச்சியையும், மேம்பட்ட வாழ்வாதாரத்தையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset