நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமராகும் தகுதி மொஹைதினுக்கு உண்டு; ஏன் இன்னொரு வேட்பாளர்?: ஹம்சா

கோலாலம்பூர்:

பிரதமராகும் அனைத்து தகுதிகளும் தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு உண்டு.

அதனால் எங்களுக்கு ஏன் இன்னொரு வேட்பாளர் என்று அதன் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கேள்வி எழுப்பினார்.

தேசியக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான்தான் அதன் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள்.

அதேவேளையில் அந்த வேட்பாளர் பட்டியலில் திரெங்கானு மந்திரி புசார் அஹமத் சம்சூரி முஹம்மத் பெயரும் அடிபடுகிறது.

டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தேசியக் கூட்டணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவர் மீண்டும் பிரதமராவதற்கு அனைத்து தகுதிகளும் உண்டு.

அவர் இருக்கும் போது அவருக்கு தகுதியில்லை என்று கூறுவதும் அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் என்பதெல்லாம் அவசியமற்றது என்று ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset