நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாட்சிமை தங்கிய மாமன்னர் என்பது பதவி உயர்வு அல்ல; கூடுதல் பொறுப்பு: சுல்தான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய தங்கிய மாமன்னர் என்பது பதவி உயர்வு அல்ல.

மாறாக கூடுதல் பொறுப்பு என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

இன்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில்,

தாம் நாட்டில் உள்ள மற்ற மலாய் ஆட்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறினார்.

மேலும் மாநிலத் தலைவராக பணியாற்றும் கடமையும் உண்டு.

இது என்னுடைய பொறுப்பை மேலும் கடினமாக்கியுள்ளது. இது கூடுதல் பொறுப்பாக இருந்தாலும் சேவை செய்வது எனது கடமை.

என்னால் முடந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பன். இதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்படும்.

முதல் நடவடிக்கையாக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் முதல் தாம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது தேசியக் கடமையை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

மாமன்னர் என்பது பதவி உயர்வு அல்ல. ஆனால் எனது சகோதர ஆட்சியாளர்களின் சார்பாக நான் பொறுப்பேற்றுள்ளேன் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset