நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐஜேஎன் சென்ற பிரதமரால் ஹாடியை சந்திக்க முடியவில்லை

கோலாலம்பூர்:

ஐஜேஎன் சென்ற பிரதமரால் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்கை சந்திக்க முடியவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஐஜேஎனுக்கு சென்றார்.

பா கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங், அவரின் நண்பர் பேராசிரியர் ஜைனுடின் சர்தார் ஆகியோரை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் பிரதமரால் ஹாடி அவாங்கை சந்திக்க முடியவில்லை.

இது குறித்து பேசிய பிரதமர், ஹாடி சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரை சந்திக்க முடியவில்லை.

அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset