நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மந்திரி பெசார் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஊடகவியலாளர் உட்பட மூவர் கைது 

ஷா ஆலம்: 

சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஊடகவியலாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 5.10 மணியளவில் உள்ளூர் செய்தித் தளத்தின் ஊடகவியலாளர் ஒருவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பிரதான பாதுகாப்பு நுழைவாயிலில் அந்த நபரைக் காவல்துறையினர் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. 

பத்து நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு வாகனத்தில் வந்த இருவர் சிலாங்கூர் மந்திரி பெசாருடன் சந்திப்பு இருப்பதாக பாதுகாப்பு நுழைவாயிலிலுள்ள காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

வாகனத்தைச் சோதனையிட்ட இரண்டு காவல்துறையினர் முன்னதாக உள்ளே நுழைய முயன்ற ஊடகவியலாளர் வாகனத்தின் பின்புற பயணிகள் பிரிவில் ஒளிந்து கொள்ள முயற்சிப்பதைக் கண்டனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் செய்தித் தொடர்பாளர் ஜே ஜே டென்னிந்த் தொடர்பு கொண்டபோது, இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

அவர்கள் அத்துமீறி நுழைந்து பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் ஷா ஆலமில் உள்ள பிரிவு 6 காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் உத்தரவின் கீழ் செயல்படுவது போல் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாகக் காவல்துறையினர் எந்த ஓர் அசம்பாவித சம்பவமும் நடக்காமல் தடுக்க உடனடியாக செயல்பட்டனர் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset