நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

B2 உரிமத்தை தானியங்கி முறையில் B உரிமமாகத் உயர்த்தும் திட்டம் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை: அந்தோனி லோக்   

சிரம்பான் : 

B2 வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டும் உரிமம் வைத்திருப்பவர்கள் தானியங்கி முறையில் B உரிமமாக மேம்படுத்தப்படுவதை அனுமதிக்கும் திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சகம் இன்னும் ஆய்வு செய்து வருகின்றது.

இந்தத் திட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சகத்தின் விவாதக் கட்டத்தில் இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

பல்வேறு கருத்துக்கள் உள்ளதால் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

B வகுப்பு ஓட்டுநர் உரிமம் அதிக சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கானது.

 B2 வகுப்பு உரிமம் பெற்றவர்கள் அதிக சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் ஆற்றுலும் திறனும் கொண்டவர்களாக இருக்கின்றார்களா என்பதை போக்குவரத்து அமைச்சு முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியின் அறிக்கையில், B2 வகுப்புக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமங்களை B-க்குத் தானியங்கி முறையில்  மேம்படுத்துவதற்கான முன்மொழிவு குறித்து அவர் கருத்து தெரிவித்தார். 

மேலும், இந்தத் திட்டத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் வகுப்பு B2 உரிமம் கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும் ஜாஹிட் கூறினார். 

எவ்வாறாயினும், பல்வேறு தரப்பினர், குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள், நாட்டின் சாலை பாதுகாப்பு அமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்த முன்மொழிவை முதலில் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மலேசிய டிரைவிங் இன்ஸ்டிட்யூட் அசோசியேஷனின் (PIMA) தலைவர் மேட் அரிஸ் பாக்கர், இந்த நடவடிக்கையானது நாட்டின் வாகன உரிமம் வாங்கும் முறை பின்தங்கியதாகக் கருதப்படலாம் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset