நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஞாயிற்றுக்கிழமை வரை ஜொகூரில் கனமழை பெய்யக் கூடும் : மெட் மலேசியா தகவல்

கோலாலம்பூர் : 

இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஜொகூரில் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜொகூரில் சிகாமாட், கூலுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகியப் பகுதிகள் கனமழை எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

ஜொகூர் மாநிலத்தையடுத்து பகாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகியப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மெட் மலேசியா தெரிவித்துள்ளது. 

தேசியப் பேரிடர் மேலான்மை நிறுவனம், நட்மா பெர்லிஸில் உள்ள ஆராவ் ஆற்றில் நீர் மட்டம் அபாய நிலையில் இருக்கும் வேளையில்  கிளாந்தானில் கிளந்தான் ஆற்றிலும் நீர் மட்டம் அபாய நிலையைக் கடந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

வெள்ளத்தால் ஜொகூர், கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் மொத்தம் 19 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதை நட்மா உறுதி செய்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset