நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரானில் நடந்த தாக்குதலுக்கு மலேசியா கடும் கண்டனம்; குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் கெர்மானில் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

அதே வேளையில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

அப்பாவிகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் மலேசியா கடுமையாக  கண்டிக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் லெபனானிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்போது ஈரானில் அந்த தாக்குதல் தொடந்துள்ளது. 

ஈரான் மற்றும் அதன் குடிமக்களுக்கு மலேசியா தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் மலேசியாவும் துக்கம் அனுசரித்து ஒற்றுமையுடன் நிற்கிறது.

அதே வேளையில் இந்த வன்முறைச் செயலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset