நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டியில் 6 தங்கங்களை வென்றது மலேசியா

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியில் 6 தங்கப்பதக்கங்களை வென்று மலேசிய அணி வென்றுள்ளது.
31ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் ஹனோயில் நடைபெற்று வருகிறது.

இப் போட்டியில் களமிறங்கியுள்ள மலேசிய அணி நேற்று வரை 6 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இன்று நடைபெறும்  போட்டிகளின் வாயிலாகவும் மலேசிய அணியினர் மேலும் பல பதக்கங்களை வெல்ல வாய்ப்புகள் உள்ளது.

மேலும் சீ விளையாட்டுப் போட்டி நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது.

தொடக்க விழாவிற்கு பின்பும் மலேசிய அணியின் பதக்க வேட்டை தொடரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பதக்கப்பட்டியலில் உபசரணை நாடான வியட்நாம் 4 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset