நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினையில் கண் துடைப்பு வேலைகளை நிறுத்தி விட்டு நிரந்தர தீர்வை கொடுங்கள்: உமா காந்தன்

ஷாஆலம்:

ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினையில் பொறுப்பில் உள்ளவர்கள் கண் துடைப்பு வேலைகளை நிறுத்தி விட்டு நிரந்தர தீர்வை கொடுக்க வேண்டும்.

ஸ்ரீ மூடா மக்கள் பிரதிநிதியும் புரட்சி இயக்கத்தின் தலைவருமான உமா காந்தன் கூறினார்.

ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சினை ஒரு தொடர் கதையாகி வருகிறது.

இதன் அடிப்படையில் தான் இங்குள்ள மக்கள் எல்லாம் அமைதியாக ஒன்றுக்கூடி போராட்டங்களை நடத்தினர்.

இதை தொடர்ந்து நடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒட்டுமொத்த மலேசிய மக்களுக்கு தெரியும்.

இந்நிலையில் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இப்பகுதியில் பல நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு மிகப் பெரிய கண் துடைப்பு வேலை போல் தெரிகிறது.

ஆகவே ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினையில் கண் துடைப்பு வேலைகளை நிறுத்தி விட்டு பொறுப்பில் உள்ளவர்கள் நிரந்தர தீர்வை கொடுக்க வேண்டும்.

மேலும் இந்த பிரச்சினைக்கு மக்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டுவதையும் அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ மூடாவில் வெள்ளை ஏறும் இடங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட பின் உமா காந்தன் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset