நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கும் :  சபாநாயகர் லாவ் வெங் சான் 

ஷா அலாம் : 

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி  18-ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்தார். 

இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள கூட்டத் தொடரைச் சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா தொடக்கி வைப்பார்.  

மேலும், அடுத்தாண்டு மார்ச் மாதம் ரமலான் நோன்பு தொடங்கவிருப்பதால் கூட்டத் தொடர்  18-ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதனுடன், இரண்டு வாரக் காலக்கட்டத்திற்குள் கூட்டத் தொடரை  முடிக்க இயலும் என்று அவர் உறுதியளித்தார். 

முன்னதாக, சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் நவம்பர் 15 -ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset