நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலையின் தாக்குதலுக்கு இலக்கான ஆடவர் உயிரிழந்துள்ளார்: சமரஹானில் சம்பவம்

சமரஹான்:

41 வயதுடைய ஆடவர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் சரவாக்கின் சமரஹானில் நிகழ்ந்ததாக சரவாக் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நேற்று மாலை 4.42 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கிண்டெக் ஜுலாவ் என அழைக்கப்படும் பலியானவரின் சடலம் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு அவரது சகோதரரால் சுங்கை சாம்பூனில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் பலியானவரின் உடலை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைத்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset