நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்தில் இல்லாத ஹோட்டல் திட்டத்தில் முதலீடு செய்த ஆடவர் 85,000 ரிங்கிட்டை இழந்தார்: போலிஸ்

ஜொகூர்பாரு:

தாய்லாந்தின் பட்டாயாவில் இல்லாத ஹோட்டல் திட்டத்தில் முதலீடு செய்த சொத்துடமை முகவர் ஒருவர் 85,000 ரிங்கிட்டை இழந்தார்.

தென் ஜொகூர்பாரு போலிஸ் தலைவர் ரவுப் செலமட் இதனை கூறினார்.

37 வயதான பாதிக்கப்பட்ட நபர் டெதர் வகை கிரிப்டோகரன்சி வடிவத்தில் 20,000 யூனிட்க்கு சமமான 85,000 ரிங்கிட்டை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் ஹோட்டல் நிர்மாணத் திட்டத்திற்காக பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களுடன் ஏற்பட்ட தொடர்பு மூலம் இந்த முதலீடு ஆரம்பமாகி  உள்ளது.

முதலீட்டுக்கு பின்  பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதமான வருமானமும் முதலீட்டு லாபமும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் போலிசில் புகார் செய்தார்,

இப்புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset