நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விலங்குகளின் நலன் குறித்து ஊடகங்களின் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்: சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி வலியுறுத்து

புத்ராஜெயா:

விலங்குகளின் நலன் குறித்து ஊடகங்களின் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி, தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள சமூக ஊடக தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் மூலம் விலங்குகள் நலன் குறித்த பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

விலங்குகளின் நலனை ஊக்குவிப்பது என்பது இனம், வயது, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு பகிரப்பட்ட பொறுபாகும்.

மேலும் இதற்கு அனைத்துத் தரப்பினரின் தீவிரப் பங்களிப்பும் தேவை.

ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது.  ஒரு சமூகம் அதன் விலங்குகளை நடத்தும் விதம் அதன் முதிர்ச்சியையும் இரக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

அதே வேளையில் விலங்குகள் நலனுக்காக குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது.

துருக்கி உட்பட பல நாடுகளில் விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினை அவர்களின் நாடாளுமன்றங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் விலங்குகள் விழிப்புணர்வு, மேலாண்மை குறித்த மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset