நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு  

கோலாலம்பூர் : 

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.5030-க்கு வர்த்தகமானது. 

ஜப்பானிய யெனுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.8563 இலிருந்து 2.8687 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 5.6269 இலிருந்து  5.6999 ஆக உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய யூரோவிற்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 4.6669இலிருந்து 4.6876 ஆக உயர்ந்துள்ளது. 

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மற்ற ஆசியான் நாணயங்களின் மதிப்போடு கலவையான வணிகமானது. 

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.3059  இலிருந்து 3.3130 ஆக  உயர்ந்தது. 

தாய்லாந்து பாட்-க்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 13.059 இலிருந்து 13.0322 ஆக சரிந்துள்ளது. 

இந்தோனேசியா ருபியாவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 276.0/276.4 இலிருந்து 276.0/277.5  ஆக உயர்ந்துள்ளது. 

பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

1 மலேசிய ரிங்கிட் 18.87 இந்திய ரூபாய்க்கு விற்பனையானது.   

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset