நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து புத்தே விவகாரம் தொடர்பாக ஹாடி அவாங்கின் அறிக்கை குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்: ஐஜிபி

கோலாலம்பூர்:

பத்து புத்தே விவகாரம் தொடர்பாக பாஸ் தலைவர் டான்ஶ்ரீ ஹாடி அவாங்கின் அறிக்கை குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

ஹாடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கை குறித்து கடந்த திங்கட்கிழமை போலிசாருக்கு அறிக்கை கிடைத்தது.

இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

அவரது சாட்சியத்தை பதிவு செய்ய போலிசார் ஹாடியை எதிர்காலத்தில் அழைப்பார்கள் என்று ரஸாருடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset