நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3.1 விழுக்காடு முதியவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி 

குவா முசாங்: 

60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட முதியவர்களில் 3.1 விழுக்காட்டினர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டிற்கான தேசிய உடல்நலம் மற்றும் நோயுற்ற ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கலைக் களையப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு முழு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

மேலும், அவர்கள் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தனார். 

வயதாகும்போது, ​​பலவீனம் முதல் டிமென்ஷியா போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

எனவே, நம்மைச் சுற்றியுள்ள முதியவர்களுக்கு நேர்மறையான மன ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

அதுமட்டுமல்லாமல், சுகாதார அமைச்சகம் இப்போது உணவில் 'சர்க்கரையை எதிர்த்துப் போராடும்' பிரச்சாரத்தைத் தீவிரமாக ஊக்குவித்து வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு தனிநபரின் மொத்த தினசரி கலோரி தேவையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதிக சர்க்கரை உட்கொள்ளல் எடை அதிகரிப்பு, உடல் பருமன், நீரிழிவு நோய், பல் சிதைவு போன்ற உடல் கோளாறுகள் ஏற்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset