நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேச நிந்தனை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை உள்துறை அமைச்சு ஆராய்கிறது: சைபுடின் நசுதியோன்

புத்ராஜெயா:

தேச நிந்தனை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை உறுதிப்படுத்தினார்.

3ஆர் எனப்படும் மதம், இனம், ஆட்சியாளர்கள் கூறுகளின் மீறல்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்கப்பட வேண்டும்.

இதற்கு  காலப்போக்கில் தேசத்துரோகச் சட்டம் 1948 இல் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதை மதிப்பிடுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

அதே நேரத்தில், அச்சிடுதல், வெளியிடுதல் சட்டம் 1984 ஐ திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் அமைச்சக மட்டத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

மேலும் எதிர்காலத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் நேற்று மக்களவவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset